2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!

நைஜீரியாவில் லொறி கவிழ்ந்து 30 பேர் பரிதாபமாக பலி!

உலகம்February 9, 2026 · 6 months முன்2
நைஜீரியாவில் லொறி கவிழ்ந்து 30 பேர் பரிதாபமாக பலி!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியா குவானர் பார்டே நகரில் லொறியொன்று விபத்துக்குள்ளானதில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

குவானர் பார்டே நகரில் உள்ள நெடுஞ்சாலையில் பல பயணிகள் மற்றும் சரக்குகளை ஏற்றிக்கொண்டு சென்ற லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த லொறியில் பயணம் செய்த 30 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.