2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 36°
LIVE
சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!

சுமார் 24 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது

உள்ளூர்January 6, 2026 · 7 months முன்1
சுமார் 24 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது

சுமார் 24 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதை பொருட்களுடன் 2 போதைப்பொருள் வர்த்தகர்கள் காத்தான்குடி பொலிஸாரினால் நேற்றிரவு(5) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 100 கிராம் ஐஸ் மற்றும் 10 கிராம் ஹெரோயின் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

கொழும்பிலிருந்து போதை பொருட்களை கடத்தி வந்து கல்லடியில் உள்ள விடுதியொன்றில் வைத்து விற்பனை செய்து வரும் குறித்தநபர்கள் பிரபல போதை வியாபாரிகள் என தெரிவிக்கப்படுகிறது.

கல்லடியிலிருந்து சம்மாந்துறைக்கு குறித்த போதைப் பொருட்களை எடுத்துச் சென்ற நிலையில் பொலிஸாரினால் இவர்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.

போதைப் பொருட்களை கடத்துவதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த நபர்கள் 26 மற்றும் 29 வயதுடைய நபர்கள் என தெரிவித்த பொலிஸார் வாழைச்சேனையை சேர்ந்தவர்கள் எனவும் மேலும் தெரிவித்தனர்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.