2026 August 17, Monday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

பெண் ஒருவரின் சடலம் மீட்பு

உள்ளூர்January 25, 2026 · 7 months முன்3
பெண் ஒருவரின் சடலம் மீட்பு

மகாவோயா, பெரகல வனப்பகுதியில் உள்ள ஓடை ஒன்றிற்கு அருகிலிருந்து, கழுத்துப் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு உயிரிழந்தவர் வராபிட்டிய பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

குறித்த பெண் நேற்று முன்தினம் கால்நடைகளைக் கட்டுவதற்காக இந்தக் வனத்திற்கு சென்றுள்ளார். அவர் மீண்டும் வீடு திரும்பாத நிலையில், உறவினர்களும் பிரதேசமக்களும் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது இந்தச் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இந்தக் கொலைக்கான காரணம் என்ன அல்லது கொலையைச் செய்தது யார் என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. 

இச்சம்பவம் தொடர்பாக மகாவோயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.