2026 August 16, Sunday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

சிறுவர்களுக்கு சமூக ஊடகம் தடை செய்யப்படுமா ?

உள்ளூர்March 25, 2026 · 5 months முன்1
சிறுவர்களுக்கு சமூக ஊடகம் தடை செய்யப்படுமா ?

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடுப்பது அல்லது அதிலிருந்து அவர்களைத் அந்நியப்படுத்துவது என்பது தற்போது ஒரு உலகளாவிய போக்காக மாறியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் சில நாடுகள் எடுத்துள்ள தீர்மானத்தை போல இலங்கையிலும் 16 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்காக சமூக ஊடக பயன்பாடு தடைசெய்யப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், சமூக ஊடகம் தொடர்பில் மட்டுமல்லாது விளையாட்டு கலாசாரம் ஒன்றை சிறுவர்கள் மற்றும் நாட்டின் பிரஜைகள் மத்தியில் வளர்த்தெடுப்பது அவசியமாகும்.

வெறும் வெற்றியாளர்களை மட்டும் உருவாக்குவது அல்ல, மாறாக நாடு முழுவதும் ஒரு முறையான விளையாட்டு கலாசாரத்தை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மையான நோக்கங்களில் ஒன்றாகும்.