2026 August 17, Monday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் ஈரநிலைகள் மற்றும் பாரம்பரிய விழா

உள்ளூர்February 2, 2026 · 7 months முன்1
உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில்  ஈரநிலைகள் மற்றும் பாரம்பரிய விழா

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட குருக்கள்மடம் ஏத்தாழைக்குள பறவைகள் சரணாலயத்தில் உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு ஈரநிலங்கள் மற்றும் பாராம்பரிய அறிவு கலாச்சார பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உதவிப்பணிப்பாளர் சுந்தரேசன் தலைமையில் இன்று குருக்கள்மடம் ஐயனார் ஆலய வளாகத்தில் இந் நிகழ்வு நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான ஜே.எஸ் அருள்ராஜ் கலந்து கொண்டதுடன் , கௌரவ அதிதிகளாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மே.வினோராஜ், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர், பேராசிரியர் எஸ் சிவரெட்ணம் போன்றோர் கலந்து கொண்டனர்.

இதன் போது மலர் மாலை அணிவித்து அதிதிகள் வரவேற்கப்பட்டு, தேசியக்கொடி , சுற்றாடல் கொடி ஏற்றப்பட்டு ,தேசிய கீதம்,சுற்றாடல் கீதம் பாடப்பட்டதுடன், மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் நடப்பட்ட ஏத்தாழைக்குள பறவைகள் சரணாலய பெயர் பலகையும் திரைநீக்கம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.