2026 October 14, Wednesday 🌧️ கொழும்பு 28° ⛈️ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 28°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

வாகன இறக்குமதியில் வரலாறு காணாத மூன்றாவது உச்சம்!

உள்ளூர்April 26, 2026 · 6 months முன்6
வாகன இறக்குமதியில் வரலாறு காணாத மூன்றாவது உச்சம்!

இலங்கையின் 2025 ஆம் ஆண்டுக்கான வாகன இறக்குமதி செலவானது, அந்நாட்டு வரலாற்றில் மூன்றாவது மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் 2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதார மீளாய்வு அறிக்கையிலேயே இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி காரணமாக நீண்டகாலமாக அமுலிலிருந்த வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு, 2025 ஜனவரி அளவில் தனிப்பட்ட வாகனங்களுக்கான அனைத்துக் கட்டுப்பாடுகளும் முழுமையாக நீக்கப்பட்டன.

இதன் விளைவாக, பல ஆண்டுகளாக தேங்கியிருந்த வாகனங்களுக்கான கேள்வி (Pent-up demand) மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் முன்னேற்றம் காரணமாக இறக்குமதி செலவு சடுதியாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.