2026 September 12, Saturday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ☀️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு கையிருப்பு முக்கியம்அரச திணைக்களங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கக்கூடாது – நீதிமன்ற எச்சரிக்கைசில மணி நேர விசாரணைக்கு பின் வெளியேறிய கோட்டாபயஇறக்குமதி வரி முறையில் 4 புதிய பிரிவுகள்!தமிழ் பட்டிமன்றத்தின் அடையாளம் இனி நினைவுகளில்!புதிய ஆண்டின் முதல் 3 மாதங்களுக்கு மின் விநியோகம் உறுதி!புடின் வருகையால் டெல்லியில் பலத்த பாதுகாப்பு!2027 முதல் சிம் பயனாளர்கள் முழு அடையாள சரிபார்ப்பு!

நாட்டின் 37வது பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம் !

உள்ளூர்August 13, 2025 · 1 year முன்3
நாட்டின் 37வது பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம் !

இலங்கையின் மூத்த துணைப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவை புதிய பொலிஸ் மா அதிபராக (IGP) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, நியமித்துள்ளார்.

அவருக்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமநாயக்கவினால் பிரியந்த வீரசூரியவிடம் இன்று புதன்கிழமை (13) பிற்பகல் வழங்கப்பட்டது.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 61 E (b) பிரிவின்படி, அரசியலமைப்பு சபையின் ஒப்புதலுடன் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 37வது பொலிஸ் மா அதிபராக வழக்கறிஞர் பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.