2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

பிரதமரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

உள்ளூர்October 20, 2025 · 10 months முன்0
பிரதமரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

தீபாவளியைக் கொண்டாடும் உலகெங்குமுள்ள மக்களுக்கும், விசேடமாக இலங்கைவாழ் மக்களுக்கும் எனது உளம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

தீபாவளிப் பண்டிகை இருள் நீங்கி, ஒளி பிறப்பதை அடையாளப்படுத்துகின்றது.

இன்று, இலங்கை தேசம் ஒரு முக்கியமான திருப்புமுனையில் நிற்கிறது. நீண்ட கால பொருளாதார, சமூக இருளிலிருந்தும், பின்னடைவுகளிலிருந்தும் விடுபட, மக்கள் புதிய எதிர்பார்ப்புக்களையும், நம்பிக்கைகளையும் சுமந்து நிற்கும் ஒரு காலகட்டம் இது.

மக்களின் வளர்ச்சிக்கான ஒரு புதிய யுகத்தை நாம் கூட்டாக ஆரம்பித்துள்ளோம்.

இந்தத் தீபாவளியின் ஒளி, பொருளாதார மீட்சிக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் வித்திடும் மெய்ஞ்ஞான ஒளியாக அமையட்டும்.

நாம் அனைவரும் கலாசாரப் பல்வகைமையின் மதிப்பை உணர்ந்து, கௌரவம், ஏற்றுக்கொள்தல், சகோதரத்துவம் ஆகிய பண்புகளுடன் கைகோர்ப்போம்.

வீடுகளிலும், நகரங்களிலும் ஏற்றப்படும் ஆயிரக்கணக்கான தீபங்களின் ஒளி, அனைத்து இலங்கையர்களினதும் மனங்களில் நம்பிக்கை, நல்லிணக்கம் மற்றும் ஞானத்தின் ஒளியைப் பரவச் செய்வதாக அமையப் பிரார்த்திக்கிறேன்.