2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

கொழும்பு பாடசாலை மாணவன் யாழில் பெருந்தொகையான போதை மாத்திரைகளுடன் கைது

உள்ளூர்November 24, 2025 · 9 months முன்2
கொழும்பு பாடசாலை மாணவன் யாழில் பெருந்தொகையான போதை மாத்திரைகளுடன் கைது

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளுடன் கைதான கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை மாணவன் உள்ளிட்ட இரு மாணவர்களும் சீர்திருத்த பள்ளியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

யாழ் மாவட்ட போதை தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ,  வெளிமாவட்ட பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இருவரை பொலிஸார் தடுத்து விசாரணைகளை முன்னெடுத்தனர். 

விசாரணைகளின் போது முன்னுக்கு பின் முரணான தகவல் வழங்கியதை அடுத்து இருவரையும் சோதனையிட்ட போது , அவர்களின் உடைமையில் இருந்து போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன.

அதனை அடுத்து இருவரையும் கைது செய்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , ஒருவர் கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை மாணவன் எனவும் மற்றையவர் ஊரெழு பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவன் எனவும் தெரிய வந்துள்ளது. 

கொழும்பு மாணவனின் உடைமையில் இருந்து 1700 போதை மாத்திரைகளும் , யாழ் ,  மாணவனிடம் இருந்து 200 போதை மாத்திரைகளும் மீட்கப்பட்டதாகவும் , விசாரணைகளின் பின்னர் இருவரையும் , யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போது , இருவரையும் அச்சுவேலியில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தடுத்து வைக்குமாறு மன்று உத்தரவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.