2026 September 6, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 25° 🌧️ மட்டக்களப்பு 28°
LIVE
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் உட்பட 11 பேருக்கு மர#ண தண்டனை!எரிமலைச் சாம்பலால் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பாதிப்பு!ஜனநாயகத்தையும் எதிர்க்கட்சியையும் அடக்க முயற்சி – ரணில் குற்றச்சாட்டு!பயணத் தடை விதிக்கும் முன்பே வெளிநாடு சென்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர்!மாணவர்களின் நலனுக்காக மேலதிக பேருந்துகள் சேவையில்!7 மாவட்டங்களை வாட்டும் வறட்சி – குடிநீர் விநியோகம் தீவிரம்!NPP மக்கள் பேரணி இன்று ஆரம்பம் – சிறிகொத்தவில் UNP கொண்டாட்டம்!இருமுறை முயன்றும் வெடிக்காத து#ப்பாக்கி – கொஸ்கொடவில் பரபரப்பு!

வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்.

உள்ளூர்August 20, 2025 · 1 year முன்0
வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்.

இலங்கையின் `கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்தின் ஊடாக 1,338 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு சுய போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் கடந்த 3 ஆம் திகதி சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கான கருமபீடம் ஒன்றும் நிறுவப்பட்டது.

இந்நிலையில் கடந்த 3 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 1,338 சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 7 ஆம் திகதி அதிகளவான சாரதி அனுமதிப் பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு 2,000 ரூபாய் என்ற குறைந்த கட்டணத்தில் சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவது தொடர்பில் இலங்கை சுற்றுலா சாரதிகளின் ஒன்றியம் எதிர்ப்பு வௌியிட்டுள்ளது.

குறித்த நடைமுறை காரணமாக, அந்த தொழிலை நம்பியிருப்போர் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக அந்த சங்கத்தின் பிரதிநிதி அமில கோரலகே குறிப்பிட்டுள்ளார்.