2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

அம்பிளாந்துறையில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு

உள்ளூர்November 24, 2025 · 9 months முன்2
அம்பிளாந்துறையில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டம் அம்பிளாந்துறை பிரதேசத்தில் இன்றைய தினம் மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

முன்னாள் போராளி குகதாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அம்பிளாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

மாவீரர்களின் பெற்றோர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுச் சுடர் ஏற்றப்பட்டுஇ மங்கல விளக்கு ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த மாவீரர்களாகிய தமது பிள்ளைகளின் புகைப்படத்திற்கு சுடரேற்றி மலர் அஞ்சலி செலுத்தி அகவணக்கம் செலுத்தினர்.

பின்னர் மாவீரர்களின் பெற்றோருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு உலர் உணவுப் பொதிகளும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்