2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 25° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

ட்ரோன் உரிமம் பெற்றார் கேப்டன் கூல் !

விளையாட்டுOctober 8, 2025 · 10 months முன்0
ட்ரோன் உரிமம் பெற்றார் கேப்டன் கூல் !

முன்னாள் இந்திய அணியின் தலைவர் கேப்டன் மகேந்திர சிங் தோனி தற்போது அதிகாரப்பூர்வ ட்ரோன் பைலட் ஆகியுள்ளார். சென்னையில் உள்ள DGCA அங்கீகரிக்கப்பட்ட கருடா ஏரோஸ்பேஸில் பயிற்சி முடித்த தோனி, தனது சமூக வலைதளங்களில் இதனை பகிர்ந்துள்ளார்.

இந்த நிறுவனத்தில் முதலீட்டாளர் மற்றும் பிராண்டு அம்பாசிடராகவும் உள்ள தோனி, தற்போது சான்றளிக்கப்பட்ட ட்ரோன் பைலட் என்ற புதிய அடையாளத்துடன் அசத்தியுள்ளார்.

– இது குறித்து கருடா ஏரோஸ்பேஸின் CEO அக்னிஸ்வர் ஜெயப்பிரகாஷ் தெரிவிக்கையில்,

“எங்கள் பிராண்ட் அம்பாசிடரும் முதலீட்டாளருமான எம்.எஸ். தோனி, தனிப்பட்ட முறையில் பயிற்சியை மேற்கொண்டு பைலட்டாக சான்றிதழ் பெற்றது எங்களுக்கு ஒரு மகத்தான மைல்கல்.

அவர் மிகுந்த கவனம் செலுத்தி மிக விரைவாக அதைக் கற்றுக்கொண்டார். ட்ரோன் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் எங்கள் நோக்கத்தில் அவர் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை, எங்கள் முழு அணிக்கும் ஒரு பெரிய ஊக்கமளிக்கிறது. “தோனி பாய் ஒரு உத்வேகம்” என்று தெரிவித்தார்.