மறைத்து வைக்கப்பட்டிருந்த 21 கோடி மதிப்புள்ள தங்க பிஸ்கட்கள் பறிமுதல்

இலங்கை விமான நிலையங்கள் மற்றும் விமானச் சேவைகள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தங்க பிஸ்கட்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட தங்க பிஸ்கட்டுகளின் பெறுமதி 21 கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊழியர்கள் வெளியேறும் பகுதியில், குறித்த நபர் அவருடைய காலுறையில் தங்க பிஸ்கட்டுகளை மறைத்து வைத்திருக்கும் போதே கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 54 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.




