2026 September 7, Monday ⛅ கொழும்பு 31° ⛅ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 28° ⛅ மட்டக்களப்பு 33°
LIVE
நாமலை சந்திக்க வெலிக்கடை சென்ற ஷிராந்தி!சத்யா நிகேதனில் கட்டிடம் சரிந்து பெரும் விபத்து!ஜெனிவாவில் இன்று இலங்கை மனித உரிமைகள் அறிக்கை முன்வைப்பு!சுற்றுலாப் பயணம் சோகத்தில் முடிந்தது – 25 பேர் உ#யிரிழப்பு!இலங்கை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முக்கிய அறிக்கை!பங்களாதேஷுக்கு எதிராக இலங்கை மகளிர் அணி வெற்றி!இந்தியா சென்ற 13 பேர் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்!இன்று 12:08க்கு 6 பகுதிகளுக்கு மேலாக சூரியன் உச்சம்!

மன்னாரில் 26 வது நாளாக தொடரும் போராட்டம்.

உள்ளூர்August 28, 2025 · 1 year முன்3
மன்னாரில்  26 வது நாளாக  தொடரும் போராட்டம்.

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் வியாழன் 26 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் விடத்தல் தீவு மாதர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஆதரவை வழங்கியுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மன்னாரில் புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவை முழுமையாக நிறுத்தும் வரை போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.