2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 25° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

வாய்ச் சொல் வீர்களாக இல்லாமல் செயல் வீரர்களாக அரசு செயல்பட வேண்டும். #Video

உள்ளூர்October 8, 2025 · 10 months முன்2
வாய்ச்  சொல் வீர்களாக இல்லாமல் செயல் வீரர்களாக அரசு செயல்பட வேண்டும். #Video

வாய்ச்சொல் வீரர்களாக இல்லாமல் செயல் வீரர்களாக இலங்கை அரசு செயல்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இன்று (08) பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் UNHRC சமீபத்திய அறிக்கை தொடர்பான கேள்விக்கு பிரதமர் பதிலளிக்க மறுத்ததை விமர்சித்த அவர், அரசின் இந்த போக்கை கைவிட்டு உறுதியான முடிவுகளை எடுக்க வேண்டும் என கோரினார்.

வழக்கமான புதன் கிழமை கேள்வி நேரத்தில் பேசிய சாணக்கியன், சென்ற வெள்ளிக்கிழமை (03.10.2025) பிரதமரிடம் முன்வைத்த கேள்விகளுக்கு இன்று பதில் கோரினார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் மேற் கொள்ளப்பட்டது. உள்நாட்டு பொறிமுறையை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை சர்வதேச பொறிமுறை வேண்டும் எனவும், மாகாண சபை தேர்தல் தொடப்பிலும், மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையினைப் பற்றிய அரசின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பாக எனது கேள்வியாது பிரதமரிடம் முன்வைக்கப்பட்டது.

அரசானது எனது கேள்விகளுக்கு பதிலளிக்காது நழுவிச் செல்கின்றது. வாய்ச் சொல் வீர்களாக இல்லாமல் செயல் வீரர்களாக இவ் அரசு செயல்பட வேண்டும் என சர்வதேச சமூகம் ஐ.நா மனித உரிமைகள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள். இவ்வாறு அல்லாமல் எமக்கான எமது மக்களுக்கான பிரச்சனைக்களுக்கான தீர்வுகளை அரசு இவ் நழுவல் போக்கினை கைவிட்டு தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.