2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வு இன்று ஆரம்பம்.

உள்ளூர்September 8, 2025 · 11 months முன்2
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வு இன்று ஆரம்பம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 வது கூட்டத் தொடர் ஜெனிவாவில் இன்று திங்கட்கிழமை இலங்கை நேரம் படி மதியம் 1.30 மணி ஆரம்பமாகவுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், உலகளாவிய மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் உரையாற்றுவார். இதன்போது, இலங்கை தொடர்பான எழுத்து மூல அறிக்கை பேரவையில் சமர்ப்பிக்கப்படும்.

பின்னர், இலங்கை நேரம் பிற்பகல் 3.45 மணிக்கு இலங்கை தொடர்பான மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை குறித்து விவாதம் நடைபெறும்.

மேலும், பிரதிநிதிகளின் கருத்துக்களின் பின்னர், இலங்கை அரசின் நிலைப்பாடு – முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் விளக்கமளிக்கவுள்ளார்.