கடந்த 12 மணி நேரத்தில் 4 துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பதிவு

கடந்த 12 மணி நேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் நடந்த நான்கு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
அதனடிப்படையில் நடப்பாண்டில் இதுவரையில் 96 துப்பாக்கிசசூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் 50 பேர் உயிரிழந்துள்ளதுடன், 53 காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.




