2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ☀️ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 25° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!

இலங்கை ஆசிரியிர் சங்கம் மூன்றாவது நாளாகவும் போராட்டம் !

உள்ளூர்October 15, 2025 · 10 months முன்2
இலங்கை ஆசிரியிர் சங்கம் மூன்றாவது நாளாகவும்  போராட்டம் !

இலங்கை ஆசிரியிர் சங்கத்தினர் மூன்றாவது நாளாகவும் ஆளுநர் செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வட மாகாண ஆசிரியர்கள், சரியான இடமாற்றக் கொள்கை அமலாக்கம் மற்றும் பின்தங்கிய மற்றும் அதிகஷ்டப் பிரதேசங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான நீண்டகால இடமாற்றக் கோரிக்கைகளை முன்னிறுத்தி வட மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று புதன்கிழமை மூன்றாவது நாளாக போராட்டம் தொடர்ந்த நிலையில், ஆசிரியர்கள் ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்நேரத்தில், அவர்கள் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றபோது, பொலிஸார் தடுத்து நிறுத்த, சிறிது பதற்றம் ஏற்பட்டது.

மேலும், இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை தொடருவோம் என ஆசிரியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்