சஜித் – முன்னாள் எம்.பிக்குகளுடன் சிறப்பு கலந்துரையாடல்.

ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று (08) சிறப்பு கலந்துரையாடல் நடத்தவுள்ளார்.
பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களைப் பெற்று எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பதே எதிர்க்கட்சித் தலைவரின் நோக்கமாகும்.




