2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!

வலையில் சிக்கிய சிவப்பு நண்டுகள் – மன்னார் மீனவர்கள் அச்சம். #Video

உள்ளூர்October 15, 2025 · 10 months முன்1
வலையில் சிக்கிய சிவப்பு நண்டுகள் – மன்னார் மீனவர்கள் அச்சம். #Video

மன்னார் – தாழ்வுபாடு கிராம மீனவர்கள் தமது கடற்பரப்பில் காணப்படும் சிவப்பு நண்டு என அழைக்கபடுகின்ற ஒரு வகையான நண்டின் தாக்கம் காரணமாக குறித்த மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மன்னார் தீவுப்பகுதி கடற்றொழில் சார் கிராமங்களை கொண்ட பகுதியாகும்.இவற்றில் தாழ்வுபாடு கிரா மமும் ஒன்றாகும்.

குறித்த கிராமத்தில் கடந்த பல நாட்களாக’ சிவப்பு நண்டு’ என அழைக்கபடுகின்ற ஒரு வகையான நண்டினால் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நண்டுகள் மீனவர்களின் வலைகளில் பாரியளவில் சிக்குவதால் மீனவர்களின் வலை தொகுதிகள் சேதமடைந்துள்ளது.

குறித்த நண்டுகளை எந்த ஒரு தேவைக்கும் பயன்படுத்த முடியாது என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இப் பகுதி மீனவர்கள் கடந்த 15 வருடங்களுக்கு முன் குறித்த சிவப்பு நண்டினால் ஒரு தடவை இப்பகுதியில் பாரிய சேதத்தை ஏற்படுத்தி இருந்ததாகவும் அதன் பிற்பாடு இந்த ஆண்டு இவ்வாறு வருகை தருவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் மீனவர்களின் வலைகளில் சிக்கும் குறித்த நண்டுகளை வலையில் இருந்து பிரித்து எடுக்க முடியாத நிலை காணப்படுவதோடு, இதனால் வலைகள் பாதிக்கப்படுவதோடு,தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.