2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 29° 🌧️ மட்டக்களப்பு 34°
LIVE
நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!

நாடு திரும்பினார் – பிரதமர் ஹரிணி. #Video

உள்ளூர்October 15, 2025 · 10 months முன்0
நாடு திரும்பினார் – பிரதமர் ஹரிணி. #Video

மக்கள் சீனக் குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நேற்று ஒக்டோபர் 14 ஆம் திகதி பீஜிங்கில் அமைந்திருக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அருங்காட்சியகத்திற்கு விஜயம் செய்தார்.

இந்தப் விஜயமானது, கட்சியின் வரலாற்றுப் பயணம் உள்ளிட்ட சீனாவின் பல தசாப்த கால சமூக மற்றும் பொருளாதார மாற்றங்கள் பற்றிய ஆழமான புரிதலைப் பெற அவருக்கு ஓர் வாய்ப்பாக அமைந்தது.

அருங்காட்சியக விஜயத்தைத் தொடர்ந்து, பிரதமர் பீஜிங்கில் அமைந்திருக்கும் இலங்கைத் தூதரகத்திற்கு விஜயம் செய்தார். அங்கே,Huawei Technologies பிரதிநிதிகள், இலங்கையின் கல்வித் துறைக்கான சாத்தியமான பயன்பாடுகளைப் பற்றிப் பிரதமரிடம் எடுத்துரைத்ததோடு, ஸ்மார்ட் வகுப்பறை (Smart Classroom) பற்றிய அவர்களது கருத்துப்படிவத்தினைப் பிரதமரிடம் சமர்ப்பித்தனர்.

பீஜிங்கில் தனது உத்தியோகபூர்வ நிகழ்வுகளை நிறைவு செய்து கொண்ட பிரதமர், நேற்று இரவு இலங்கை திரும்பினார்.