2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 29° 🌧️ மட்டக்களப்பு 34°
LIVE
நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் நினைவு விழா -2025

உள்ளூர்October 5, 2025 · 10 months முன்3
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் நினைவு விழா -2025

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் பிரதேச ஆலயங்கள் மற்றும் அறநெறிப் பாடசாலைகளுடன் இணைந்து ஏற்பாடு செய்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் நினைவு விழா ஞாயிற்றுக்கிழமை(04.10.2025) மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் தலைமையில் கோட்டை கல்லாறு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் அறநெறிப்பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளுடன் ஆரம்பமான பண்பாட்டு ஊர்வலமானது ஊர் வீதிகளுடாக கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தை சென்றடைந்ததும், பிரதேச செயலாளரினால் சுவாமி விபுலானந்தரின் திருவுருவத்திற்கு மாலை அணிவித்தல் மற்றும் பூசை நிகழ்வுடன் பிரதான நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இதன்போது அறநெறிப்பாடசாலை மாணவர்களினால் சுவாமி விபுலாநந்தர் தொடர்பான கதாப்பிரசங்கம், பேச்சு, பாடல், நாடகம் மற்றும் வில்லுப்பாட்டு போன்ற கலை நிகழ்வுகள் ஆற்றுகை செய்யப்பட்டன. 

இந்த நிகழ்வில் கோட்டைக்கல்லாறு ஆலயங்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பிரதேச அறநெறிப்பாடசாலைகளின் ஆசிரியர்கள், மற்றும் மாணவர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.