2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

LPL கிரிக்கெட் தொடரில் ஆட்ட நிர்ணயம் ; பாகிஸ்தான் பிரஜைக்கு எதிராக பிடியாணை!

விளையாட்டுNovember 22, 2025 · 9 months முன்2
LPL  கிரிக்கெட் தொடரில் ஆட்ட நிர்ணயம் ; பாகிஸ்தான் பிரஜைக்கு எதிராக பிடியாணை!

2024 ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் ( LPL ) கிரிக்கெட் தொடரில் இடம்பெற்ற ஆட்ட நிர்ணயம் தொடர்பில் தம்புள்ளை தண்டர்ஸ் (Dambulla Thunders) கிரிக்கெட் அணியின் முகாமையாளரான பாகிஸ்தான் பிரஜைக்கு எதிராக கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். போதரகம பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2024 LPL கிரிக்கெட் தொடரின் போது ஆட்ட நிர்ணயம் செய்ய கிரிக்கெட் வீரர்களை தூண்டியதாக தம்புள்ளை தண்டர்ஸ் (Dambulla Thunders) கிரிக்கெட் அணியின் முகாமையாளரான பாகிஸ்தான் பிரஜைக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது.

பாகிஸ்தான் பிரஜை, இது தொடர்பான விசாரணைகளுக்காக விளையாட்டு குற்றங்களைத் தடுப்பதற்கான பொலிஸ் பிரிவில் முன்னிலையாகாமல் இருப்பதால், அவரை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளின் அறிக்கையை டிசம்பர் 5 ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.