2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° 🌧️ மட்டக்களப்பு 33°
LIVE
நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!

இரத்தினபுரியில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு!

உள்ளூர்November 17, 2025 · 9 months முன்1
இரத்தினபுரியில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு!

இரத்தினபுரி மாவட்டம், வெவெல்வத்த பகுதியில் உள்ள ஒரு சிறிய நீர்மின் நிலையத்தின் அணைக்கட்டு அருகே தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த 21 வயது பெண்ணின் சடலம் மர்மமான முறையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டம் ஹபுகஸ்தென்ன பஹல பகுதியில் உள்ள கெல்ல கல்லெல்ல பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வங்கியில் இருந்து நிதி உதவி பெறுவதற்காக இரத்தினபுரி நகரத்திற்குச் சென்றிருந்ததாகவும், வீடு திரும்பும் போது ஏதேனும் அசம்பாவிதத்துக்கு முகம்கொடுத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகில் அவரது பல உடமைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.