பேராதனை பல்கலைக்கழகத்தின் கழிப்பறையில் கரு

பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள விஜேவர்தன மகளிர் விடுதியின் 4வது மாடியில் உள்ள கழிப்பறையில் ‘கரு’ பகுதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
விடுதியின் பிரதி தலைமை ஆசிரியை அளித்த முறைப்பாட்டின் பேரில், பேராதனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதற்கமைய, சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், கரு பகுதியை பிரேத பரிசோதனைக்காக பேராதனை மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.




