2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

இன்றும் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

உள்ளூர்November 23, 2025 · 9 months முன்2
இன்றும் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

தொடரும் பலத்த மழை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் இன்றும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் 6 அடி உயரத்திலும், 4 வான் கதவுகள் 4 அடி உயரத்திலும் திறக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 19,400 கன அடி நீர் விடுவிக்கப்படுவதாக வாரியபொல பிரதேச நீர்ப்பாசனப் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தப்போவ நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் 3 அங்குல அளவிலும், 4 வான் கதவுகள் 2 அங்குல அளவிலும் திறக்கப்பட்டுள்ளன.

இதிலிருந்து வினாடிக்கு 3,720 கன அடி நீர் மீ ஓயாவிற்கு விடுவிக்கப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.