2026 August 16, Sunday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாடு ஆரம்பம்

உள்ளூர்November 20, 2025 · 9 months முன்3
முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாடு ஆரம்பம்

போதைப்பொருள் அச்சுறுத்தலை தோற்கடிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாடு இன்று தங்காலையில் ஆரம்பமாகிறது.

தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருட்களிலிருந்து இலங்கை சமூகத்தை விடுவிப்பதை நோக்கமாகக் கொண்ட ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாடு, இன்று (20) பிற்பகல் தங்காலை பொது விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறுகிறது.

இந்நாட்டின் இளைஞர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில், நாடு முழுவதும் ஒன்பது மாகாணங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நிகழ்ச்சித்திட்டம் ஒக்டோபர் 30ஆம் திகதி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.