2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

கடற்கரை பகுதியை நோக்கி படையெடுத்த டொல்பின் கூட்டம் : பார்வையிட்டு குதுகளித்த மக்கள்

உள்ளூர்November 16, 2025 · 9 months முன்2
கடற்கரை பகுதியை நோக்கி படையெடுத்த டொல்பின் கூட்டம் : பார்வையிட்டு குதுகளித்த மக்கள்

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக்கடவை கடற்கரை பகுதியை நோக்கி நேற்றைய தினம் மதியம் ஒரு தொகை டொல்பின் மீன்கள் கூட்டமாக கடற்கரையை வந்தடைந்தது.

இந்த நிலையில் இதனை அறிந்த அப்பகுதி மீனவர்கள், பொதுமக்கள்,பெண்கள், சிறுவர்கள் என அனைவரும் சென்று பார்வையிட்டதோடு, சிறுவர்களுடன் டொல்பின் மீன்கள் விளையாடியதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

குறித்த டொல்பின் மீன் இனம் மன்னார் மாவட்டத்தில் கரையோர பகுதிக்கு கூட்டமாக வருகை தந்தமை இதுவே முதல் தடவையாகும்.

நீண்ட நேரம் இலுப்பை கடவை கடற்கரையோரங்களில் கூட்டமாக சுற்றி திரிந்த குறித்த டொல்பின் மீன்களை தமது இருப்பிடம் நோக்கி செல்ல சில மீனவர்கள் உதவியை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் குறித்த டொல்பின் மீன்கள் மீண்டும் கூட்டமாக தமது இருப்பிடத்தை நோக்கி சென்றது.

குறித்த அரிய காட்சியை மீனவர்கள் தமது கையடக்க தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்தமையும் குறிப்பிடத்தக்கது.