2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° 🌧️ மட்டக்களப்பு 33°
LIVE
நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – மற்றுமொரு பெண் கைது!

உள்ளூர்November 17, 2025 · 9 months முன்2
கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – மற்றுமொரு பெண் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த 7ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின்போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண், வெளிநாட்டில் வசிக்கும் குற்றக்கும்பலைச் சேர்ந்த ஒருவருடன் தொடர்பைப் பேணி, சந்தேக நபர்களுக்கு காரொன்றை வழங்கியமை மற்றும் கொலை செய்யப்பட்டவர் பயணித்த வீதி பற்றிய தகவல்களை வழங்கியமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பெண் கொழும்பு 13, ஆட்டுப்பட்டித் தெருவைச் சேர்ந்த 32 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.