2026 August 18, Tuesday 🌧️ கொழும்பு 29° ☀️ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ⛅ மட்டக்களப்பு 32°
LIVE
வாக்குமூலம் அளிக்க ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வந்த கெஹெலிய!இலங்கையின் பணவீக்கம் 5% இலக்கை நோக்கி படிப்படியாகக் குறையும் – நந்தலால் வீரசிங்க!20 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்துடன் SLTDA தலைமைப் பொறுப்பில் சுரன்ஜித் வேவிட்ட!திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்ததாகக் கூறப்படும் நபர் நாடு திரும்பினார்!மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்!ஹிருணிகா உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நுவரெலியா கிரகரி வாவியில் பரபரப்பு – இரண்டு சிறுவர்கள் மீட்பு!பாடப்புத்தக விநியோகத்தில் என்ன நடந்தது? விசாரணையில் வெளியாகும் தகவல்கள்

யாழிற்கு புதிய உள்ளக விளையாட்டரங்கு

உள்ளூர்November 11, 2025 · 9 months முன்2
யாழிற்கு புதிய உள்ளக விளையாட்டரங்கு

யாழ்.மாவட்ட மாணவர்களிடையே விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் அங்கு உள்ளக விளையாட்டரங்கொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பாடசாலைகளிலும் விளையாட்டுக் கழகங்களிலும் மேசைப் பந்து, டென்னிஸ், பூப்பந்து, வலைப்பந்து மற்றும் சதுரங்கம் போன்ற உள்ளக விளையாட்டுக்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளக விளையாட்டரங்கு நிர்மாணிக்கப்படவுள்ளது.

170 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணப் பணிகள் இடம்பெறவுள்ளன.

இது குறித்தான விளையாட்டு அமைச்சின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.