2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

வெளிநாட்டு பல்கலைகழகங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

உள்ளூர்November 4, 2025 · 10 months முன்2
வெளிநாட்டு பல்கலைகழகங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

இலங்கை பல்கலைக்கழகங்களை உலகத் தரப்படுத்தல் சுட்டிகளுக்கு மேம்படுத்தல் மற்றும் சர்வதேச மயப்படுத்துவதற்காக வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் உயர்கல்வி ஒத்துழைப்புக்களை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி பின்வரும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் நோக்கில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் சீனக் குடியரசின், சீன விஞ்ஞானக் கல்வி நிறுவகத்தின் கீழுள்ள புவியியல் மற்றும் புவி இயற்பியலுக்குமிடையில் 05 வருடங்களுக்கு செல்லுபடியாகும் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

களனிப் பல்கலைக்கழகம் மற்றும் இந்தியாவின் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான 05 வருடங்களுக்கு செல்லுபடியாகும் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் ஜப்பானின் யொகோஹோமா தேசிய பல்கலைக்கழகத்தின் பல்புலமை விஞ்ஞான நிறுவகத்திற்குமிடையில் 05 வருடங்களுக்கு செல்லுபடியாகும் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் ஜப்பானின் டொகுயாமா பல்கலைக்கழகத்தின் தேசிய தொழிநுட்ப நிறுவகத்திற்குமிடையில் 05 வருடங்களுக்கு செல்லுபடியாகும் புரிந்துணர்வு ஒப்பந்தம்.