சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பீடி இலைகளுடன் மூவர் கைது

மன்னார் ஓலைத்தொடுவாய் கடற்கரைப் பகுதியில் கடந்த 08ஆம் திகதி இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற சுமார் 1211 கிலோ கிராம் பீடி இலைகள் மற்றும் ஒரு டிங்கி படகுடன் மூன்று சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மூவரும் கல்பிட்டியின் தொரடி மற்றும் ஜனசவிபுர பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், சந்தேகநபர்கள், டிங்கி படகு மற்றும் பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மதுவரி சிறப்புப் பிரிவிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.




