2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 34°
LIVE
திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!நாணய சுழற்சி இந்தியா வசம் – முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது!

AIயை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்- சுந்தர் பிச்சை

தொழில்நுட்பம்November 19, 2025 · 9 months முன்2
AIயை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்- சுந்தர் பிச்சை

ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று கூகுள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

நேர்காணல் ஒன்றில், ஏ.ஐ.யை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் என எச்சரித்துள்ளார்.

“ஏ.ஐ. என்னும் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி மற்றும் தாக்கம் அபாரமாக உள்ளது. இருப்பினும் அதில் தவறுகளுக்கு இடம் உண்டு.

ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது.

வணிகம் மற்றும் பொருளாதார ரீதியாக அவை தரும் தகவல்களில் பிரச்சினை இருக்கலாம். எனவே ஏ.ஐ.யை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்” என தெரிவித்துள்ளார்.