2026 September 7, Monday ⛅ கொழும்பு 31° ⛅ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 29° ⛅ மட்டக்களப்பு 33°
LIVE
நாமலை சந்திக்க வெலிக்கடை சென்ற ஷிராந்தி!சத்யா நிகேதனில் கட்டிடம் சரிந்து பெரும் விபத்து!ஜெனிவாவில் இன்று இலங்கை மனித உரிமைகள் அறிக்கை முன்வைப்பு!சுற்றுலாப் பயணம் சோகத்தில் முடிந்தது – 25 பேர் உ#யிரிழப்பு!இலங்கை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முக்கிய அறிக்கை!பங்களாதேஷுக்கு எதிராக இலங்கை மகளிர் அணி வெற்றி!இந்தியா சென்ற 13 பேர் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்!இன்று 12:08க்கு 6 பகுதிகளுக்கு மேலாக சூரியன் உச்சம்!

அதிகரிக்கும் சிறுத்தைகளின் நடமாட்டம் – தோட்டத் தொழிலாளர்கள் அச்சம்.

உள்ளூர்August 18, 2025 · 1 year முன்3
அதிகரிக்கும் சிறுத்தைகளின் நடமாட்டம் – தோட்டத் தொழிலாளர்கள் அச்சம்.

சிறுத்தைகளின் நடமாட்டம் காரணமாக தேயிலை மலைகளில் கொழுந்து பறிக்கும் தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியுள்ளதாகவும், தங்களது வீடுகளில் செல்லப்பிராணிகளாக வைத்திருக்கும் நாய்களை சிறுத்தைகள் வேட்டையாடும் சம்பவம் தற்போது அதிகரித்துள்ளதாகவும் தோட்டத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கினிகத்தேனை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு நாய்களில் ஒன்றை சிறுத்தை இழுத்துச் செல்வது அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கெமராவில் பதிவாகியுள்ளது.

மேலும், சிறுத்தைகளின் நடமாட்டம் தோட்டங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகரித்துள்ளதன் காரணமாக மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளதோடு, நாய்களை வேட்டையாடும் சம்பவம் அதிகரித்து காணப்படுகின்றது.

எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.