2026 August 18, Tuesday 🌧️ கொழும்பு 29° ☀️ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ☀️ மட்டக்களப்பு 32°
LIVE
20 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்துடன் SLTDA தலைமைப் பொறுப்பில் சுரன்ஜித் வேவிட்ட!திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்ததாகக் கூறப்படும் நபர் நாடு திரும்பினார்!மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்!ஹிருணிகா உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நுவரெலியா கிரகரி வாவியில் பரபரப்பு – இரண்டு சிறுவர்கள் மீட்பு!பாடப்புத்தக விநியோகத்தில் என்ன நடந்தது? விசாரணையில் வெளியாகும் தகவல்கள்ஆகஸ்ட் 21 முதல் 23 வரை ஹப்புத்தாலையில் பிரமாண்ட உணவுத் திருவிழா!பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல் மற்றும் கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

மசாஜ் நிலைய போர்வையில் “ஐஸ்” வர்த்தகம் – இருவர் கைது.

உள்ளூர்September 24, 2025 · 11 months முன்0
மசாஜ் நிலைய போர்வையில் “ஐஸ்” வர்த்தகம் – இருவர் கைது.

கண்டி – ராஜசிங்க மாவத்தை பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் உட்பட இருவர் கண்டி பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 05 கிராம் ஐஸ் போதைப்பொருளும் ஆணிடமிருந்து 10 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

துபாயில் உள்ள ”இஷார” என்ற போதைப்பொருள் கடத்தல்காரரின் தலைமையில் சந்தேக நபர்கள் இருவரும் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.