2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛈️ மட்டக்களப்பு 32°
LIVE
ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!

குருக்கள்மடம் புதைகுழி வழக்கு – சம்பந்தப்பட்டோர் அனைவருக்கும் ஆஜர் உத்தரவு.

உள்ளூர்October 28, 2025 · 10 months முன்2
குருக்கள்மடம் புதைகுழி  வழக்கு – சம்பந்தப்பட்டோர் அனைவருக்கும் ஆஜர் உத்தரவு.

மட்டக்களப்பு – குருக்கள்மடம் புதைகுழி தொடர்பில் தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் எதிர்வரும் 17ஆம் திகதி நீதிமன்றிற்கு ஆஜராகுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான வழக்கு இன்று (27) களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றில் நீதவான் த.பிரதீபன் முன்னிலையில் வழக்கு விசாரணைகள் எடுத்துகொள்ளப்பட்டது.

குறித்த புதைகுழியைத் தோண்டுவதற்கான நிதியைப் பெறுவதில் இழுபறிநிலை காணப்படுவதாகவும் அவற்றை உடனடியாகத் தீர்பதற்கான பொருத்தமான கட்டளையை ஆக்குமாறும் முறைப்பாட்டாளர்கள் சார்பில் மன்றில் தோன்றிய சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் திறந்த மன்றில் சமர்ப்பணங்களை மேற்கொண்டார்.

குறித்த சமர்ப்பணங்களில் திருப்தியுற்ற மன்று தொடர்ந்து வழக்கின் திறத்தவர்கள் அனைவரையும் எதிர்வரும் 17.11 2025 யில் முன்னிலையாகுமாறு மன்று கட்டளை ஆக்கியுள்ளது.

இவ்வழக்கில் முறைப்பாட்டாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணிகளான சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எச்.எம்.மனாறுதீன், சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

குறித்த வழக்கானது எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.