2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

தங்கம் விலையில் அதிகரிப்பு

உள்ளூர்September 8, 2025 · 11 months முன்2
தங்கம் விலையில் அதிகரிப்பு

இன்று கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், தங்கம் பவுண் ஒன்றிற்கு 4000 ரூபாயால் அதிகரித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை 289,000 ரூபாயாக இருந்த 24 கரட் தங்கம் பவுண் ஒன்று, இன்று 293,000 ரூபாயாக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதென கொழும்பு செட்டியார் தெரு தங்கநகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (08) தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 293,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 271,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 36,625 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,875 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.