2026 September 13, Sunday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 24° ⛈️ மட்டக்களப்பு 31°
LIVE
22ஆவது திருத்தத்தை தோற்கடிக்க மக்கள் சக்தி திரட்டும் சஜித்!36 பிரதேச செயலகப் பிரிவுகள் வறட்சியின் பிடியில்!இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை 15 இலட்சத்தை கடந்தது!ஜாவா கடலில் மாயமான கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது!ஜாவா கடலில் மீட்பு நடவடிக்கை தீவிரம்!கோப்பாய் கல்வியியல் கல்லூரியில் அதிர்ச்சி சம்பவம்!புதிய பொது முகாமையாளர் நியமனம் கோரும் தொழிற்சங்கங்கள்!தாய்லாந்தில் இலங்கைத் தொழிலாளர்களுக்கு வாய்ப்பு விரிவாகும்!

விவசாய நிலங்களுக்குள் ஆபிரிக்க நத்தைகளின் ஊடுருவல்

உள்ளூர்November 14, 2025 · 10 months முன்5
விவசாய நிலங்களுக்குள் ஆபிரிக்க நத்தைகளின் ஊடுருவல்

யாழ்.மாவட்டத்தின் தீவக பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் ஆபிரிக்க நத்தைகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளது.

அவற்றை கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, மாவட்ட விவசாய குழு கூட்டம் மாவட்டச் செயலாளர் ம.பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரபாகரன், மக்கள் தமது அன்றாட வாழ்க்கைக்கு தேவையான தானியங்கள் மற்றும் மரக்கறிகளை நெடுந்தீவிலே உற்பத்தி செய்கிறார்கள். இந்நிலையில் ஆபிரிக்க நத்தைகளில் ஊடுருவல், அதிகளவான தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வராவிட்டால் அங்கு வாழ்கின்ற மக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்வதில் பாரிய சிக்கல் நிலை ஏற்படுவதுடன் அவர்களின் வாழ்வாதாரத்தை இழந்து போகும் துர்ப்பாக்கியமும் ஏற்படுமென சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர், பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் உள்ளடக்கிய குழு ஒன்றை உருவாக்கி, குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்தார்.