2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

திலீபனின் 38வது நினைவேந்தல் மட்டக்களப்பில் உணர்வுபூர்வ அனுஷ்டிப்பு.

உள்ளூர்September 26, 2025 · 11 months முன்0
திலீபனின் 38வது நினைவேந்தல் மட்டக்களப்பில் உணர்வுபூர்வ அனுஷ்டிப்பு.

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 38வது நினைவு தினம், வெள்ளிக்கிழமை(26.09.2025) மட்டக்களப்பு மாவடிவேம்பு சிவானந்தா விளையாட்டுக்கழக மைதானத்தில் தாயக செயலணியின் அனுசரணையில், மாவடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர் ஆ.பிரிநட் குணபாலனின் தலைமையில் நடைபெற்றது.

தியாக தீபம் தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த 9.45 மணிக்கு நினைவேந்தல் ஆரம்பித்ததுடன், மாவீரர் சிறிநந்தியின் தாயாரான நல்லரெட்ணம் பவளமலரால் இதன்போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து திலீபனின் உருவப்படத்திற்கு முன்னாள் போராளி ஒருவர் மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் பலரும் உணர்வு பூர்வமாக கலந்து கொண்டனர்.

இந் நினைவேந்தல் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இ.ஸ்ரீநாத், ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை தவிசாளர் மு.முரளிதரன், பிரதேச சபை உறுப்பினர்கள், தாயக செயலணியின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.