2026 September 6, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 25° 🌧️ மட்டக்களப்பு 28°
LIVE
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் உட்பட 11 பேருக்கு மர#ண தண்டனை!எரிமலைச் சாம்பலால் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பாதிப்பு!ஜனநாயகத்தையும் எதிர்க்கட்சியையும் அடக்க முயற்சி – ரணில் குற்றச்சாட்டு!பயணத் தடை விதிக்கும் முன்பே வெளிநாடு சென்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர்!மாணவர்களின் நலனுக்காக மேலதிக பேருந்துகள் சேவையில்!7 மாவட்டங்களை வாட்டும் வறட்சி – குடிநீர் விநியோகம் தீவிரம்!NPP மக்கள் பேரணி இன்று ஆரம்பம் – சிறிகொத்தவில் UNP கொண்டாட்டம்!இருமுறை முயன்றும் வெடிக்காத து#ப்பாக்கி – கொஸ்கொடவில் பரபரப்பு!

துபாய் பாதாள உலகக்குழுவால் திலீப பீரிஸுக்கு கொலை மிரட்டல்.

உள்ளூர்August 26, 2025 · 1 year முன்1
துபாய் பாதாள உலகக்குழுவால்  திலீப பீரிஸுக்கு கொலை மிரட்டல்.

ஜனாதிபதி வழக்கறிஞர் மற்றும் மேலதிக மன்றாடியார் திலீப பீரிஸின் உயிருக்கு, துபாயில் மறைந்திருக்கும் திட்டமிட்ட குற்றவாளிகள் குழு ஆபத்து விளைவிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொலை சதி தொடர்பாக பொலிஸ்மா அதிபருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், இந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து அவரது பாதுகாப்புக்காக ஒரு சிறப்பு பொலிஸ் குழு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

திலீப பீரிஸின் வீட்டையும் அவர் பயணிக்கும் போது பாதுகாப்பதற்காக இந்த சிறப்பு பொலிஸ் குழு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.