மஹிந்த, மைத்திரியை தொடர்ந்து வெளியேறும் சந்திரிக்கா !

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் தமது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வௌியேற தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
இதற்கமைய முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் இதுவரை உத்தியோகபூர்வ இல்லங்களை பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று (10) நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்திற்கு அமைய அந்தச் சலுகையை அவர்கள் மூவரும் இழந்துள்ளனர்.
அதன்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று தமது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறினார், அவ்வாறே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




