2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 25° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

“சரோஜா” எனும் தொனிப் பொருளில் விழிப்புணர்வு நிகழ்வு.

உள்ளூர்October 28, 2025 · 10 months முன்0
“சரோஜா” எனும் தொனிப் பொருளில் விழிப்புணர்வு நிகழ்வு.

“சரோஜா” என்ற தொனிப்பொருளில் பாதுகாப்பற்ற சிறுவர், சிறுமியர் தொடர்பில் முச்சக்கர வண்டி மற்றும் அரச தனியார் பேருந்துகளுக்கு விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வு இன்று நாடு பூராகவும் நடைபெற்றது.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் சிறுவர் – பெண்கள் பிரிவின் ஏற்பாட்டில், கல்முனை பிரதான பேரூந்து தரிப்பிடத்தில் ‘சரோஜா ஸ்டிக்கர்’ விழிப்புணர்வு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

தொடர்ந்து, முச்சக்கரவண்டிகள் மற்றும் பேரூந்துகளில் பாதுகாப்பு விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. இந்நிகழ்வில் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல். லசந்த கலு ஆராச்சி மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதேபோல் சாய்ந்தமருது மற்றும் காரைதீவு பொலிஸ் நிலையங்களின் ஏற்பாட்டிலும் இதே ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிகழ்வுகளுக்கு முன்னோடி முயற்சியாக, அண்மையில் அம்பாறையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.

“சரோஜா ஸ்டிக்கர்” என்பது பாதுகாப்பற்ற சிறுவர், சிறுமியர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் தேசிய நடவடிக்கையாகும்.