இலங்கை இராணுவத்தின் 76 வது ஆண்டு நிறைவு விழா.

இலங்கை இராணுவத்தின் 76 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு மத நிகழ்ச்சிகளில் இராணுவக் கொடிகளுக்கு ஸ்ரீ தலதா மாளிகையில் ஆசீர்வாதம் பெறும் விழா நேற்று (28) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவின் தலைமையில்
இராணுவத்தின் அனைத்து படையணிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






