2026 August 17, Monday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

கிளிநொச்சியில் 31 வெடிக்காத குண்டுகள் மீட்பு.

உள்ளூர்October 2, 2025 · 11 months முன்0
கிளிநொச்சியில் 31 வெடிக்காத குண்டுகள் மீட்பு.

கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை வடக்கு பகுதியில் நேற்று (01) பிற்பகல் 2:30 மணியளவில் 31 வெடிக்காத குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

முகமாலை வடக்கு பகுதியில் வீட்டு உரிமையாளர் ஒருவர் தமது வீட்டில் பள்ளம் தோண்டியபோது, ஆபத்தான குண்டுகள் கண்டறியப்பட்டது. தொடர்ந்து, அவர் உடனடியாக பளை பொலிஸாருக்கு அறிவித்தார்.

கிளிநொச்சி நீதிமன்ற உத்தரவின் படி, பாதுகாப்பான முறையில் குண்டுகளை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.