2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 29° 🌧️ மட்டக்களப்பு 34°
LIVE
நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!

ஒலிம்பிக் சபையின் பணிப்பாளர் நாயகம் பிரதமருடன் சந்திப்பு

உள்ளூர்September 9, 2025 · 11 months முன்2
ஒலிம்பிக் சபையின் பணிப்பாளர் நாயகம் பிரதமருடன் சந்திப்பு

உலக நீர்விளையாட்டு மற்றும் ஆசிய ஒலிம்பிக் சபையின் பணிப்பாளர் நாயகம் கேப்டன் ஹசைன் அல் முசல்லம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

பிரதமரின் அலுவலகத்தில் வைத்து நேற்று இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இதன்போது, விளையாட்டு வீரர்களின் மேம்பாடு மற்றும் விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்கு அரசாங்கத்திற்கும் விளையாட்டுத் துறைக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை கேப்டன் ஹசைன் அல் முசல்லம் வலியுறுத்தினார்.

மேலும், தற்போதுள்ள விளையாட்டுச் சட்டம் தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதின் அவசியத்தையும், தேவையான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டியதன் தேவையையும் எடுத்துரைத்தார்.

அப்போது, பாடசாலை மாணவர்களிடமும் சமூகத்திலும் விளையாட்டை ஊக்குவிப்பதன் மூலம் நன்னடத்தையும் ஆரோக்கியமும் வளரும் என்று பிரதமர் கூறினார்.

அத்தோடு, விளையாட்டுத் துறையின் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள், விளையாட்டு வீரர்களுக்குப் பாதுகாப்பு அளித்தல், குறிப்பாகப் பெண்களின் பங்கேற்பில் கவனம் செலுத்துதல் போன்றவற்றில் அரசாங்கம் முன்னுரிமை அளித்து முதலீடு செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் கல்வி அமைச்சகத்துடன் இணைந்து நீர்வழி விளையாட்டுத் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.