நிந்தவூரில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை – நிந்தவூர், அல் மஸ்ஹர் வீதியில் வைத்து நேற்று குறித்த நபரை சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸார் கைது செய்தனர்.
அத்துடன் 1000 மில்லி கிராம் ஐஸ் மற்றும் 750 மில்லி கிராம் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
குறித்தநபர் 32 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




