கைவிடப்பட்ட நிலையில் சிசுக்கள் மீட்பு.

மாத்தளை பிடகந்த தோட்டத்தில் உள்ள பழைய தேயிலைத் தொழிற்சாலைக்கு அருகே வடிகாலில் புதிதாகப் பிறந்த ஒரு சிசு வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. தகவல் அடிப்படையில் கந்தேனுவர பொலிஸார் சிசுவை மீட்டு, மாத்தளை பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். பெற்றோர்கள் தொடர்பான தகவல்கள் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இப்பலோகம பகுதியில் ஓய்வுபெற்ற குடும்ப சுகாதார ஊழியரின் வீட்டின் முன் நாற்காலியில் வைக்கப்பட்ட ஒரு மாதம் வயதுடைய சிசுவும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சிசு நிகவெரட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, நல்ல உடல் நலத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இரு சம்பவங்கள் தொடர்பிலும் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




