2026 October 9, Friday ⛅ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

‘ஏஹி பஸ்ஸிகோ’ அமைதிக்கான நடைபயணத்தின் இறுதி நாள் இன்று…

உள்ளூர்April 28, 2026 · 5 months முன்4
‘ஏஹி பஸ்ஸிகோ’ அமைதிக்கான நடைபயணத்தின் இறுதி நாள் இன்று…

“ஏஹி பஸ்ஸிகோ” (Ehi Passiko) சர்வதேச அமைதிக்கான நடைபயணத்தின் இறுதி நாள் இன்றாகும்.

இன்று நண்பகல் 12.00 மணிக்கு களனி ரஜமஹா விகாரையில் ஆரம்பமாகும் இந்த அமைதிக்கான நடைபயணம், சுதந்திர சதுக்கத்தை நோக்கி பயணிக்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து, மாலை 4.00 மணிக்கு சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் விசேட அரச விழா நடைபெறவுள்ளது. 

இதன்போது, வணக்கத்திற்குரிய பஞ்ஞாக்கர தேரர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவிடம் ஸ்ரீ மகா போதியின் கன்று ஒன்றை ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக கையளிக்கவுள்ளார். சுதந்திர சதுக்கத்திலிருந்து மாலை 5.30 மணிக்கு மீண்டும் ஆரம்பமாகும் நடைபயணம், கொழும்பு கங்காராம விகாரையை சென்றடைந்ததும் நிறைவு பெறவுள்ளது. 

உலகிற்கு அமைதிச் செய்தியை கொண்டு செல்லும் நோக்கில் கடந்த 22ஆம் திகதி தம்புள்ளையில் ஆரம்பமான இந்த “ஏஹி பஸ்ஸிகோ” சர்வதேச அமைதிக்கான நடைபயணம், நேற்று யக்கலையிலிருந்து களனி ரஜமஹா விகாரை வரை வந்தடைந்தது. 

இதேவேளை, நடைபயணம் காரணமாக இன்று கொழும்பு நகரின் பல வீதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.