2026 October 9, Friday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு இன்னும் இறுதி முடிவு இல்லை!

உள்ளூர்April 3, 2026 · 6 months முன்5
அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு இன்னும் இறுதி முடிவு இல்லை!

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து ஆளும் தேசிய மக்கள் சக்தி இதுவரை இறுதி முடிவெடுக்கவில்லை என அதன் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த நிஹால் அபேசிங்க, கட்சி இன்னும் சாதக பாதகங்களை ஆராய்ந்து வருவதாகக் குறிப்பிட்டார்.

“நாங்கள் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை. இதில் ஒரு தார்மீகப் பிரச்சினை இருப்பதை நாங்கள் அறிவோம். என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்,” என அவர் தெரிவித்தார்.

இலங்கை உரக் கூட்டுத்தாபனத்தின் கொள்வனவு முகாமையாளராகப் பணியாற்றிய காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பில், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக கையூட்டல், ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் வரும் ஏப்ரல் 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் முற்பகல் 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விவாதம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.