2026 October 15, Thursday 🌧️ கொழும்பு 25° ⛈️ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

மொரட்டுமுல்லவில் பரபரப்பு!

உள்ளூர்May 13, 2026 · 5 months முன்6
மொரட்டுமுல்லவில் பரபரப்பு!

மொரட்டுமுல்ல காவல்துறை எல்லைக்குட்பட்ட ஜனதா ஜய மாவத்தையில் அமைந்துள்ள இரண்டு மாடி வீடொன்றில் இன்று (13 ) தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

குறித்த வீட்டின் மேல் மாடியில் அமைந்திருந்த வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் டயர்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த இடமே இவ்வாறு தீப்பற்றியுள்ளது.

இந்தத் தீ விபத்தினால் அங்கிருந்த வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் டயர்கள் முற்றாக எரிந்து தீக்கிரையாகியுள்ளதுடன், வீட்டிற்குச் சிறு அளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், மொரட்டுவ மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவின் தீயணைப்பு வாகனம் மற்றும் நீர் தாங்கி ஊர்தி என்பன தீயணைப்புப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டன.

தீயணைப்புப் பிரிவு அதிகாரிகளின் கடும் முயற்சியினால் தீ மேலும் பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்தத் தீ விபத்தினால் எவருக்கும் உயிர்ச்சேதங்களோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை எனவும், தீப்பரவலுக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் தீயணைப்புப் பிரிவினரும் காவல்துறையினரும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.